"எயார் மாஷல்"ஹர்ஷ துமிந்த
அபேவிக்ரம
RWP, RSP, VSV, USP, MSc (Def Stu) in Mgt, M.A.
(London) rcds, psc, qfi
"எயார் மாஷல்"ஹர்ஷ துமிந்த
அபேவிக்ரம
"எயார் மாஷல்" கர்ஷ துமிந்த
அபேவிக்ரம அவர்கள் 1960- 11- 28ம் திகதியன்று பிறந்ததுடன் 1980ம் ஆண்டு
இலங்கை விமானப்படையில் ஓர் கெடெட் அதிகாரியாக இணைந்து 1982ம் ஆண்டு
பயிற்ச்சியை முடித்துக்கொண்டு இலங்கை விமானப்படையில் "பைலட்"அதிகாரியாக
நியமிக்கப்பட்டார்.
மேலும் இவர் 1980ல் தனது தொழிலை
ஆரம்பிக்கும் போது இலங்கையில் யுத்தமற்ற ஒரு சமாதான சூழ்நிலை
காணப்பட்டதனால் விமானங்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை
என்றாலும் 1980ம் ஆண்டு நடுப்பகுதிகளில் இனவாத யுத்தம் இலங்கையில்
தலைதூக்கியதனால் இலங்கை விமானப்படை தம்மிடம் உள்ள யுத்த விமானங்களை யுத்த
களத்தில் பயன்படுத்த தொடங்கியது.
எனவே இது இலங்கை
விமானப்படையின் விமானிகளுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்ததுடன் விஷேடமாக
அக்காலகட்டத்தில் இருந்த ஒரு தலை சிறந்த ,இளமைமிகு விமானி என்ற வகையில்
தற்போதைய விமானப்படைத்தளபதி சகல விதமான யுத்த விமானங்களையும் யுத்த
களத்தில் ஒட்டிச்சென்றார் ,மேலும் விமானி என்ற வகையில் இவரிடம் காணப்பட்ட
விஷேட திறமை கரணமாக ஓர் விமானி பயிற்றுவிப்பாளராகவும் தொழில் புரிந்தமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1980 கடைசிப்பகுதியில்
இனவாத யுத்தம் அதிகரிக்கத்தொடங்கியதுடன் அதனால் யுத்தஜெட் விமானங்களின்
தேவை அவசியப்பட்டது அப்போது தற்போதைய விமானப்படைத்தளபதியின் ஆரம்பகால
திறமைகளை கருத்திற்கொண்டு முதன்முதலாக இவர் யுத்த ஜெட் விமானங்களை
ஓட்டிச்செல்ல திறமைபடைத்தவராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் இவர் எப் .டி. 05 ,எப்.07 இல.05
யுத்த ஜெட் விமான பிரிவின் முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அதேநேரம்
இலங்கை விமானப்படையின் அனைத்து விமானிகளுக்கும் இவரிடம் காணப்பட்ட
நுட்பங்களை கற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .
அத்தோடு யுத்த காலத்தில் இஸ்ரேலிடம் இருந்து கபீர்
யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதில் இவர் முன்னனியாக திகழ்ந்தமையும் விஷட
அம்சமாகும்.
மேலும் "எயார் மார்ஷல்" கர்ஷ துமிந்த
அபேவிக்ரம அவர்கள் தமது வாழ்வில் யுத்த விடயங்களுக்கு பெரும் பகுதியான
காலங்களை கழித்ததனால் வடகிழக்கு மேலும் இவர் 2011-02- 27 ம் திகதியன்று
எயார் மாஷல் ஆக தரமுயர்த்தப்பட்டு இலங்கை விமானப்படையின் 13வது
விமானப்படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.
எனவே இவர்
அன்று தொடக்கம் விமானப்படையின் முன்னேற்றுத்துக்காக இவரின்
நுட்பங்களையும்,ஆற்றல்களையும் பயன்படுத்தி விமானப்படையின்
முன்னேற்றத்துக்கா செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
கட்டளை தளபதியாக ,பலாலி விமானப்படை
முகாமின் கட்டளை அதிகாரியாக,அநுராதபுரம்,இரத்மலானை மற்றும் சீனக்குடா
விமானாப்படைத்தளங்களின் கட்டளை அதிகாரியாகவும்,கிழக்கு வலய கட்டளை
அதிகாரியாகவும் விஷேடமாக பாதூகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் மன்ற கல்லூரியை
நிறுவுவதில் பிரதான பங்களிப்பினை செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு இவர் 2006ல் விமானப்படை தலைமையகத்தில்
விமானதொழிற்பாட்டுக்கான தலைமை அதிகாரியாகவும் 2008ல் பிரதி மன்றங்களின்
கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவர் விமான தொழிற்பாட்டுக்கான தலைமை அதிகாரியாக
செயற்பட்ட காலத்தில் விமான தொழிற்பாடு தொடர்பாக விமானப்படையிடம் காணப்பட்ட
நுட்பங்களில் ஒரு புரட்ச்சியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
,மேலும் வான் பாதுகாப்பு ,ரேடார் ஆளில்லா விமான ஊர்தி போன்ற
பிரிவுகளிலும் புதிய மாற்றங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
அத்தோடு இவரின் கல்வித்தகமைகளை
எடுத்துக்கொண்டால் முதலாவதாக கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை
கற்று பின்னர் அமெரிக்காவில் கட்டளை மற்றும் மன்ற கல்லூரியில் கல்வியை
பயின்று பின்னர் இங்கிலாந்தில் கலை முதுமானிப்பட்டத்தை முடித்துக்கொண்டு
இறுதியாகசேர் ஜோன் கொதலாவல பாதூகாப்பு பல்கழைகளகத்தில் முதுமானி
முகாமைத்துவ விஞ்ஞான பட்டப்படிப்பினை முடித்துள்ள அதேநேரம் எ2 தரத்திலான
சிறந்த விமானி பயிற்றுவிப்பாளராகவும் ,வர்த்தக விமானி சாரதி
அனுமதிப்பத்திரத்தையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவர் "ரன விக்ரம பதக்கம் ,"ரன சூர பதக்கம் ",உத்தம சேவா பதக்கம் " ,
விஷிஷ்ட் சேவா விபூஷன பதக்கம் போன்றவற்றையும் வென்றுள்ளமையும்
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவர் திருமதி
நீலிகா அபேவிக்ரம அவர்களை மணமுடித்துள்ளதுடன் ,இவர்களுக்கு கசுன் என்ற
புதல்வரும் காணப்படுகின்றார். மேலும் இவர் ஒரு சிறந்த
பொளத்தர் என்பதுடன் ,இவரின் பொழுதுபோக்காக சங்கீதன் ,கொல்ப்
என்பனவாகும்.