பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் திரு.கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பங்குபற்றிய விமானப்படை வீரர்களை வாழ்த்துவதற்காக இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாமிற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியானது தேசிய கீத இயற்றலுடன் ஆரம்பமானதுடன் பின்னர் யுத்தத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மொளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் சீப் மார்ஷல்" குணதிலக அவர்கள் உரையாற்றுகையில் விமானப்படையின் இவ்வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விடயம் குழுச்செயற்பாடு ஆகும் எனக்குறிப்பிட்டார் .
என்பதுடன் .. பின்னர் பாதுகாப்பு செயளாலர் உரையாற்றுகையில் இலங்கை விமானப்படையானது எம்.ஐ.24 மூலம் மேற்கொண்ட யுத்தநடவடிக்கைகள் ,அதிவேக ஜெட் விமானங்கள் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள், காயமுற்றோர்களை விமானங்கள் மூலம் எடுத்துச்செல்லல்,ஆளில்லா விமானங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் என்பன யுத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு அவர் மேலும் உரையாற்றுகையில் விமானப்படையானது வான் மற்றுமல்லாது தரை,கடல் வழியாகவும் மனிதாபிமன நடவடிக்கைகளில் ஈடுபட்டமை பற்றியும் குறிப்பிட்டார்.
அத்தோடு இவ்வைபவத்துக்கு சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதுடன் இங்கு பாதுகாப்பு செயளாலரினால் விமானப்பிரிவுகள் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.