இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின்
ஜனாதிபதியும், முப்படைத்தளபதியினதும் அங்கீகாரத்தின் படி விமானப்படைக்கு
பொன்விழா பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் இப்பதக்கமானது நிக்கல் உலோகம்
மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் ,இதில் இலங்கை தாய் நாட்டினை ,விமானப்படை
மூலம் பாதுகாக்கப்படும் ஒழுங்குமுறை பிரதிபலிக்கப்படுகின்றது அதாவது
முதலில் விமானப்படைத்தளபதி,மன்ற அதிகாரிகளின் பிரதானி,
பணிப்பாளர்கல்,முகாம்களின் கட்டளை அதிகாரிகள்,யுத்தத்தில் எதிரிகளுக்கு
எதிராக கையாளப்படும் மூலதர்மங்கள் என்பனவாகும்.
மேலும்
இதன் மத்தியில் விமானப்படை இலட்ச்சினையும், அதன் கிழக்கே 50 என்ற
இலக்கமும் பொறிக்கப்பட்டுள்ள அதேநேரம் பதக்கத்தின் இரு
பக்கங்களிலும் சூரிய உதயக்காட்ச்சி வடிவமைக்கப்பட்டு, பொன்விழாவுக்கான கால
எல்லை 02. 03. 1951- 02. 03. 2001 என்பனவும் பொறிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்அத்தோடு இதில் பொன் விழா என்று சிங்களம் மற்றும்
தமிழில் குறிக்கப்பட்டுள்ள அதேநேரம் பல்வேறு நிறங்களில் மடிப்புகளையும்
காணக்கூடியதாக இருக்கின்றன ..
அத்தோடு இப்பதக்கமானது
விமானப்படையின் நிரந்தர படைப்பிரிவில் 05 வருட சேவைக்காலத்தை
கொண்டவர்களுக்கும் ,சுயேட்சை படைப்பிரிவில் 05 வருட
சேவைக்காலத்தை கொண்டவர்களுக்கும்,05 வருட சேவைக்காலத்தை கொண்ட சிவில்
உத்தியோகத்தகர்களுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு இப்பதக்கத்தினை 25ஆவது நிறைவாண்டு விழா பதக்கத்துக்கு அருகாமையில்
அணியப்பட வேண்டும் என்பதுடன் ,இதனை விமானப்படை விழாக்களுக்கும்
அணியலாம்.