வருடாந்த முகாம் பரிசோதனை 2011 - வவுனியா

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் வவுனியா விமானப்படை முகாமில் தனது வருடாந்த பரிசோதனையை 01.04.2011ம் திகதியன்று மேற்கொண்டார்.

எனவே வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரோகித பெர்னான்டு விமானப்படை தளபதியினை வரவேற்ற  அதேநேரம் 'பிளைட் லெப்டினென்ட்' தம்மிக  ரத்னாயக்க விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.

மேலும் விமானப்படைத்தளபதி வவுனியா விமானப்படை முகாமின் இல. 111 UAV பிரிவு ,இல. 02  ரேடார் மற்றும் இல. 23 ரெஜிமென்ட் ஆகிய பிரிவுகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன்  ,மாமடுவை  படைப்பிரிவினையும்  பரிசோதனை  செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு  சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக  வவுனியா விமானப்படை முகாமில் சர்வதேச  பாலர் பாடசாலையினையும் விமானப்படைத்தளபதி  அவர்கள் திறந்துவைத்தமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.