இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல் பிரிவின் நிறைவாண்டு விழா

கடுநாயக்க விமானப்படை முகாமின் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல் பிரிவின் 53வது வருட நிறைவாண்டு விழா 01-04- 2011ம் திகதியன்று சர்வமத வழிபாடுகளுடன்  மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வுக்கு அப்பிரிவில் பணிபுரியும் அனைத்து தரப்பினரும் அவர்களது குடும்பத்தினரும் பங்குபற்றிய அதேநேரம் பெளத்த, ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதகுருமார்களும் கலந்துகொண்டதுடன், பங்குபற்றியவர்களுக்காக விருந்து உபசாரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல் பிரிவின் இயக்குனர் "எயார் கொமடோர்" ரோஹண பதிரக பிரதம அதிதியாக.கலந்து கொண்ட அதேநேரம் முன்னால்  இயக்குனர்  இளைப்பாரிய "குறூப்கெப்டன்" ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

 அத்துடன் இப்பிரிவானது 1958ம் ஆண்டு கடுநாயக்க விமானப்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் அன்று தொடக்கம் இன்று வரை தகவல் தொழிநுட்பம், தொடர்பாடல் போன்ற பிரிவுகளில் பல சேவைகளை நாட்டுக்காக ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.