சீனக்குடா விமானப்படை கல்லூரியின் 60வது நிறைவாண்டு விழா.
இலங்கை விமானப்படையின் சீனக்குடா கல்லூரியானது தனது 60வது நிறைவாண்டு விழாவினை 03.04.2011ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடியது.
எனவே இதனை முன்னிட்டு விஷேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், அணிவகுப்பினை "எயார் வைஸ் மார்ஷல்" கபில ஜயம்பதி அவர்கள் ஏற்றுக்கொண்ட அதேசமயம் அணிவகுப்பின் கட்டளை அதிகாரியாக "விங்கமான்டர்" TVD தேஷப்பிரிய அவர்கள் கடமையாற்றியதுடன், உதவி கட்டளை அதிகாரியாக "பிளையின் ஒபிஸர்" சனத் ரத்னாயக அவர்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனைத்தொடர்ந்து விழாவினை முன்னிட்டு ஓர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றதுடன், இறுதியாக வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமையைத்தொடர்ந்து விழா நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




















































