விமானப்படையின் 12வது பிரிவின் 'பிரித்' உபதேச வைபவம்.

இலங்கை விமானப்படையின்  12வது பிரிவின் "பிரித்" உபதேச வைபவம் 01.04.2011ம் திகதியன்று ஏகல விமானப்படை முகாம் மற்றும் களுதுரை "போதி" விகாரையின் பங்களிப்புடன் கடுநாயக்க விமானப்படை முகாமில் நடைப்பெற்றது.

எனவே இந்நிகழ்வில் சுமார் 15 தேரர்கள் பங்குபற்றிய அதேநேரம் இவ்வைபவத்துக்காக விமான தொழிற்பாட்டு பிரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" ககன் புலத்சிங்கள கலந்து கொண்டதுடன், இதனை 12ம் பிரிவின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" அசேல ஜயசேகர ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இந்நிகழ்விற்காக மீள்நிர்மாணப்பிரிவின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்"சாந்த மவிடிகம, தொழிற்பாட்டு கட்டளை அதிகாரி " ஸ்கொடரன் லீடர்" கிரிஷாந்த கபுகம மற்றும் பயிற்ச்சி பிரிவின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர் "இந்திக பிரேமதாஸ ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வுக்கு கடுநாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரணில் குருசிங்க உட்பட விமானிகள்,பொறியியல் அதிகாரிகள் மற்றும் சக படை வீரர்களும் கலந்து கொண்ட அதேநேரம் இங்கு கடந்த கபீர் விமான விபத்தில் உயிரிழந்த "ஸ்கொட்ரன் லீடர்" மொனாத் பெரேராவினையும் நினைவுகூறப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.