ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான பாராட்டு வைபவம்.

"றோயல் சிலோன்" விமானப்படையின் முதல் நிர்வாக இயக்குனரான "குறூப் கெப்டென்" PG வல்பிட (01010) அவர்களின் 95வது பிறந்த நாளினை முன்னிட்டு விஷேட மதிய போஷன நிகழ்வு கொழும்பு விமானப்படை அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே  இங்கு  முன்னாள் விமானப்படைத்தளபதியான "எயார் சீப் மார்ஷல்" பெடி மென்டிஸ் மற்றும் இலத்திரனியல் பொறியியல் இயக்குனர்  "குரூப் கெப்டென்"  HAD ரணசிங்க  உட்பட தற்போதைய நிர்வாக இயக்குனரான " எயார் வைஸ் மார்ஷல்" ரோகித ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

அத்தோடு " குரூப்கெப்டன்" வல்பிட அவர்கள்  "றோயல் சிலோன் " விமானப்படைக்கு நேரடி அதிகாரியாக 04.04.1952ம் திகதியன்று விமானப்படையில் இணைந்துகொண்டதுடன் தனது 18 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்து கொண்டு 10.11.1970ம் ஆண்டு ஓய்வு பெற்ற அதேநேரம் இவர் பல்கலைக்கழக பௌதீகவியல் பட்டத்துடன் விமானப்படையில் இணைந்து கொண்ட இரண்டாவது பட்டதாரி அதிகாரியாவர் எனபதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.