இலங்கை விமானப்படையின் மருத்துவ முகாம்

கால்டன் "சுவ உதான" சுகாதார மற்றும் சமூக நலன்புரி நிகழ்ச்சி திடத்தின் கீழ் பெண்கள் நல மருத்துவ முகாமொன்று  29.04.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமில் இடம்பெற்றது.

எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கையின்  முதற்பெண்மணி திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட  இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .நீலிகா அபேவிக்ரம அவர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

மேலும் இத்திட்டமானது திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய பெண்களின் குறிப்பாக விமானப்படை பெண் உறுப்பினர்களின் சுகாதார மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்துவதாக அமைந்திருந்த அதேநேரம்  இந்நிகழ்ச்சியானது  முற்றாக  இலவசமாக  இலங்கை விமானப்படை வைத்திய குழாமினாலும் , "வி.ஒ.ஜி."  ஹேமந்த தொடன்பால அவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு  இந்நிகழ்வுக்கு விமானப்படையின் சுகாதார இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்"  NH குணரத்ன , "எயார் கொமடோர்" சுனில் குணரத்ன  மற்றும் இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்"  சுமங்கள டயஸ்  போன்றோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.