இல.32 மற்றும் இல.33 ஆவது அடிப்படை பரிசூட் பயிற்சி நிறைவு விழா

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை அம்பாரை பரிசூட் பாடசாலையில் வைத்து இல.32 மற்றும் இல.33 ஆவது அடிப்படை பரிசூட் பயிற்சி பாடநெறி ஆகியவைகளின் பயிற்சி நிறைவு விழா விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

இந்த பாடநெறிக்காக 10 விமானப்படை அதிகாரிகளுடன் , 47 விமானப்படை வீரர்கள் , 12 விமானப்படை வீராங்களைகள் மற்றும் 03  கடற்படை அதிகாரிகளுடன் கடற்படையின் 03 பேர்கள் மற்றும் 03 தரைப்படை அதிகாரிகளுடன் தரைப்படையின் ஒருவரும் மற்றும் விசேட அதிரடிப்ப படையின் 05 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படை பன்ப்பாளர்கள் உட்பட அம்பாரை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எச்.டப்.ஆர். சந்திம அவர்கள் , அம்பாரை விமானப்படை பரிசூட் பாடசாலையின் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் சீ.எஜ். பியசுந்தர அவர்கள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.