பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்ச்சி.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பல்கலைகழகத்துக்கு புதிதாக அனுமதி பெற்ற  மாணவர்களுக்கான 3 வார தலைமைத்துவப்பயிற்ச்சி இலங்கை விமானப்படை தியதலாவை முகாமில் மேற்கொள்ளப்பபட்டு வருகின்றது.

மேலும் இப்பயிற்ச்சி நெறியானது உடற்பயிற்ச்சி,அணிவகுப்புப்பயிற்ச்சி,சட்டம் தொடர்பான கல்வி,முதலுதவிப்பயிற்ச்சி ஆகியன உள்ளடக்கி இருப்பதுடன், இவை அனைத்தும்  மாணவர்களின் எதிர்கால நலன்கலை பொறுத்தே மெற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இப்பயிற்ச்சி நெறியினை பார்வையிடுவதற்காக உயர் கல்வி அமைச்சர் SB திஸாநாயக அவர்கள் கடந்த 07.06.2011ம் திகதியன்று தியதலாவை விமானப்படை முகாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ,அங்கு அவர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடியமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இப்பயிற்ச்சி நெறியானது தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" ஜனக அமரசிங்கவின் வழிகாட்டலின் அடிப்படையில் ,  "ஸ்கொட்ரன் லீடர்" கனிஷ்க ஜயசேகர மற்றும் "ஸ்கொட்ரன் லீடர்" சந்தன முனசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெறும்  அதேநேரம் பயிற்ச்சி நெறியானது எதிர்வரும் ஜூன் 10ம் திகதி நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.