விமானப்படைக்கு நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகள்

55வது நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகள் தமது பயிற்ச்சியினை நிறைவுசெய்து கொண்டு வெளியேறும்  விழா கடந்த 02.06.2011ம் திகதியன்று தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டென்" ஜனக அமரசிங்க அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இதில் இணைத்துக்கொள்ளப்பட்ட 33 அதிகாரிகள்  இலத்திரனியல் பொறியியல்,விமான உட்கட்டமைப்பு பணி,வினியோகப்பகுதி,ஆகிய துறைகளில்  "பைலட் ஒபிஸர்" ,"பிளையின் ஒபிஸர்" ,"பிளைட் லெப்டினென்ட்" எனும் தரத்தில் சுமார் 3 மாத பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு வெளியேறியமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு இவ்வதிகாரிகளின் பெற்றோர்களும் வருகை தந்திருந்ததுடன், அவர்களுடன்  தியதலாவை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டென்" ஜனக அமரசிங்க மற்றும் "விங் கமான்டர்" சமிந்த விக்ரமரத்ன ஆகியோர் சுமுக கலந்துரையாடலில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.