விமானப்படையின் நலன்புரி வர்த்தக நிலையம்.

இரத்மலானை விமானப்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நலன்புரி வர்த்தக நிலைய நிதியத்தினை இலங்கை விமானப்படைத்தளபதி " எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களால் வைபவரீதியாக கடந்த 14.06.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

எனவே இந்நிலையமானது முன்னர் கொழும்பு விமானப்படை முகாமினில் அமைந்திருந்ததுடன் பின்னர் இடவசதி நிமித்தம் இரத்மலானை விமானப்படைக்கு நவீன வசதிகளுடன் இடமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு மதவழிபாடுகளை அடுத்து இந்நிலையம் திறந்துவைக்கப்பட்டதுடன் ,இதன்மூலமாக விமானப்படை மற்றும் வெளி இடங்களிலும் இருந்து பொருட்களை பெற்று விமானப்படை உறுப்பினர்களுக்கு மானிய விலையில் விற்கப்படுவது விஷேட அம்சமாகும்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு விமானப்படை நிர்வாகக்குழுவினர் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" சுமங்கல டயஸ் ,விமானப்படை நலன்புரி திட்ட அதிகாரி "குரூப் கெப்டென்" JSI விஜேமான்ன உட்பட மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.