குவன் விரு புலமை பரிசில் வழங்கும் வைபவம்

குவன் விரு புலமை பரிசில் வழங்கும் வைபவம் கடந்த 25.06.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமினில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

எனவே இப்புலமை பரிசில் திட்டமானது ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் அனுசரனையுடன் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் 10- 17 வயதுகுற்பட்ட சிறுவர்களுக்கு அவர்களின் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் வரையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் வைபவமானது பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டதுடன் பின்னர் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்படதைத்தொடர்ந்து சேவா வனிதா பிரிவின் தவிசாளர் திருமதி. பிரபாவி டயஸ் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் ,"ஸ்கொட்ரன் லீடர் " நதீர தந்திரிகே புலமை பரிசில் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.