இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் கரம் போட்டிகளின் ஏக்கல மற்றும் கொழும்பு விமானப்படை தளங்கள் வெற்றி
இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் கரம் போட்டிகளின் கடந்த 2018 அக்டோபர் 30ம் திகதி கொழும்பு சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் முடிவடைந்தது இந்த போட்டியில் ஏக்கல மற்றும் கொழும்பு விமானப்படை தளங்கள் முறையே ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்
அதே போல் இலங்கை விமானப்படை கொழும்பு மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய படைத்தளம் ஆகியன முறையே ஆண் பெண் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர் இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாக ஏக்கல விமானப்படையின் சிரேஷ்ட படை வீரர் ஜீவன் மற்றும் கொழும்பு விமானப்படையின் கோப்ரல் அத்தனகொட ஆகியோர் பெற்றுக்கொண்டனர் இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் சிவில் பொறியியல் பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம் ஆர் கே சமரசிங்க அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார்கள் அதேபோல் விமானப்படை கரம் சங்கத்தின் பொறுப்பதிகாரி குருப் கேப்டன் சிறிமான அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்















