கொழும்பு விமானப்படை தளம் 2018ம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இன்டர் யூனிட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றது

இலங்கை விமானப்படையின்  வருடாந்த இன்டர் யூனிட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின்இறுதி போட்டி  கடந்த 2018 நவம்பர் 26 ம் திகதி  கொழும்பு  ட்ரைபல்  கிறீன் மைதானத்தில்  வெகு விமர்சையாக இடம்பெற்றது இந்த போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கொழும்பு விமானப்படை தளம்  வெற்றி பெற்று கொண்டது.

 ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற போட்டியில்  கொழும்பு விமானப்படை  19.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை ரத்மலான விமானப்படை தளத்திட்கு  இலக்காக நிர்ணயித்தது  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ரத்மலான விமானப்படை அணியினர் 19.3 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்று  தோல்வியை தழுவிக்கொண்டது.

பெண்கள்  பிரிவில் இடம்பெற்ற போட்டியில்  கொழும்பு விமானப்படை  90 ஓட்டங்களை ஏக்கல  விமானப்படை தளத்திட்கு  இலக்காக நிர்ணயித்தது  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ஏக்கல விமானப்படை அணியினர் 03 விக்கட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை பெற்று  தோல்வியை தழுவிக்கொண்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை தரப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர்  பெர்னாடோ அவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை கிரிக்கெட் விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி  எயார் கொமாண்டர்  வியங்வில  அவர்களும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.