இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் 2018 ம் ஆண்டுக்கான நத்தார் கரோல் கீதம் .

இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2018 டிசம்பர் 14 ம் திகதி  பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் 2018 ம் ஆண்டுக்கான  விமானப்படை  கரோல் கீதம் நிகழ்வு ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த  நிகழ்வில்  திரு.  ஈஷாந்த டி ஆண்ட்ராடோ அவர்களின் வழிநடத்தலில் கீழ்  விமானப்படை பேண்ட் வாத்திய குழுவினராலும்  இலங்கை விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின்  பங்கெடுப்பில்  இடம்பெற்றது.

இந்தநிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பது செயலாளார் திரு . ஹேமசிறி பெர்னான்டோ அவர்களை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி  அனோமா ஜெயம்பதி  ஆகியோர் வரவேற்றனர்.

மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத, விமானப்படை பணிப்பாளர் நாயகம்,மற்றும்  உத்தியோகத்தர்கள், பிற பதவிகள், சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.