இல .07மற்றும் 08 ம் படைப்பிரிவினருக்குமான ஜனாதிபதி வர்ணம் வழங்கும் நிகழ்வு.

இலங்கையின்  முழு ஆகாயத்தையும்  பாதுகாக்கும்   68   நினைவுதினத்தை  கொண்டாடும் இலங்கை விமானப்படையானது  வான் பாதுகாப்பு  எனும்கருப்பொருளை முன்னெடுத்து இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படை அதன் முழுமையானபங்களிப்பை இன்றும் எதிர்காலத்திலும் வழங்குவதட்கு எந்நேரமும் தயார் நிலையில் உள்ள   விமானப்படையை  கௌரவிக்கும்  நோக்கிகள் இலங்கை  சோஷலிச சனநாயக குடியரசின்  அதிமேதகு ஜனாதிபதி அவர்களால்  ஜனாதிபதி வர்ணம்  கடந்த 2019 மார்ச் 02 ம் திகதி  ஹிங்குரகோட  விமானப்படையின் இல 07 மற்றும் இல 08 ஆகிய படைப்பிரிவுக்கு  வழங்கப்பட்டது.

எந்த ஒரு நாட்டின் ஆயுதப்படைகளுக்கு  கௌரவபடுத்தும்  வகையில்  வரணம்கள் வழங்கப்படுமாயின்  அப்படையினர்  அந்நாட்டின் வளர்ச்சிக்காக  செயற்படுவதோடு நாட்டின் நட்பெயரையும் நிலைநிறுத்துவதால்  அதனை பாராட்டவே இந்த வர்ணம்  நாட்டின்  தலைவரினால் வழங்கப்படும் ஒரு ஜனாதிபதி தனித்துவமான விருதாகும்.

இலங்கை விமானப்படையின்  ஜனாதிபதி வர்ண  வரலாற்றில்  முதல் முதலாக 1976 ம் ஆண்டு 1 வது  ஜனாதிபதிவர்ணமும் 2001 ம் ஆண்டு   50 வருட பூர்த்தியை நினைவிட்டும் 25 வருட பூர்த்திக்கு வழங்கப்பட்ட  ஜனாதிபதி வர்ணத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் தொடர்ந்து 2009 ம் ஆண்டு  ஜனாதிபதி  வர்ணம்  05 ம்  முறையே  இல 02 போக்குவரத்து படைப்பிரிவிற்கும் ,இல  04 ஹெலிகாப்டர் படைபிரிவிற்கும் ,  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைபிரிவிற்கும் ,இல 10 ஜெட் விமானப்படைப்பிரிவிற்கும் மற்றும்  ரெஜிமென்ட் படைப்பிரிவிற்கும்  வழங்கப்பட்டது அதன் பின்பு 09 வருடங்களுக்கு பிறகு தியத்தலாவ  பயிற்ச்சி பாடசாலைக்கும் ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்டது.

1994 ம் ஆண்டு அன்றய ஸ்கொற்றன் ளீடறும்  தற்போதைய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  ஆரம்பிக்கப்பட்ட இல  04 ஹெலிகாப்டர் படைப்பிரிவானது அதன்பிறகு ஹங்குரகோட விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டது.1996 ஆம் ஆண்டில், அது இல  07 படைப்பிரிவாக  பெயரிடப்பட்டது. இந்த படைப்பிரிவில்  பெல் 206 ஜெட் ரேஞ்சர் ஹெலிகாப்டர் 05 ம் ,பெல் 212 வகையான ஹெலிகாப்டர்கள் 10 ம் , இந்த  படைப்பிரிவில் 09 விமானிகளும்  07  வான் வழி  ஆயுத இயக்கப்பிரிவு வீரர்களும் உள்ளனர் மேலும் இந்த படைப்பிரினர் இறுதி யுத்தத்தின் பொது தங்களுடைய பங்களிப்பினை நாட்டுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1986 ம் ஆண்டு  சீனாவில் இருந்து வரவளைக்கப்பட்ட  வை 12 ரக  09  விமானங்களுடன் 1996 ம் ஆண்டு ரத்மலான  விமானப்படை தலத்தில்  ஆரம்பிக்க பட்ட இல 08 இலகுரக  போக்குவரத்து படைப்பிரிவானது  இறுதி யுத்தநடவடிக்களின் பொது  சுமார் 50000 இலக்குகளை  வெற்றிகரமாக 105522 மணித்தியாலம்  பயணம் செய்து தனது பங்களிப்பை  வழங்கி உள்ளது.

இலங்கை விமானப்படையின் இல 07,இல 08 படைப்பிரிவினருக்கான ஜனாதிபதி  வர்ணத்தை  ஜனாதிபதி அவர்களினால்  விமானப்படை தளபதி அவர்களிடம்  வழங்க அதனை  இல 07 மற்றும் இல 08 படைப்பிரிவின்  கட்டளை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்  இந்த நிகழ்வை  ஹிங்குரகோட  விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டோர்  பந்து எதிரிசிங்க அவர்களின்  ஏற்டபாட்டில்  கௌரவ மரியாதைக்குரிய பாதுகாப்பு அமைச்சர், ருவன் விஜேவர்த்தன, மற்றும் முப்படை பிரதானி ,அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன, மற்றும்  இராணுவப்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, மற்றும்  விமானப்படை  தலைமை அதிகாரிகள்  உட்பட  முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.