விமானப்படை கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள்.

இலங்கை விமானப்படையின்  68 வது நினைவுதினத்தை முன்னிட்டு  கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் கடந்த மார்ச் 02 ம் திகதி  ஹிங்குரகோட  விமானப்படை வளாகத்தில்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  ஆலோசனைக்கு அமைய பொதுமக்களுக்காக  இலவசமாக பார்வையிட கூடிய வகையில் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படை  தளபதி அவர்களின் அழைப்பின் பேரில்  பிரதம அதிதியாக  அதிமேதகு கௌரவ  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்  மேலும் இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை அதிகாரி எயார் வைஸ்  மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  வான் பாதுகாப்பு பிரிவி பிரதானி  எயார் வைஸ்  மார்ஷல்  பத்திரன அவர்களும்  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் படை வீரரர்களும் கலந்து கொண்டனர்.

விமானப்படையின் சேவைகள் மற்றும்  வளங்களை பொதுமக்களுக்கு  காட்சிப்படுத்தியதோடு   பொதுமக்களுக்கு திடீர் விபத்துக்கள் ஏற்படும் பொது  விமானப்படைபணிகள் விமானப்படையின் வளங்களின் ஊடக  எவ்வாறு மக்களுக்கு   விமானப்படை தனது சேவையை வழங்குகின்றது என்பதை நேரடியாக காண்பிக்கபட்டது.  

இந்த கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வில்  விமான சாகசம், மற்றும், பாராசூட் சாகசம்,  ரெஜிமென்ட்  ,விசேட படைப்பிரிவினால் ,நடாத்தப்படும்  மீட்பு சாகச நிகழ்வுகள்  விமானப்படை  நாய்களின்  சாகசம்  பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு  சாகசம்கள்  கலாச்சர  நிகழ்வுகள் மற்றும்  நாடு பூராகவும் உள்ள  இசைகுவினரின் இசைநிகழ்வும்  இடம்பெற உள்ளன இந்த நிகழ்வுகள்   நண்பகல் 0200 மணிதொடக்கம்  நள்ளிரவுவரை இடம்பெறும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.