20 வது இலங்கை விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளில் விமானப்படையினர் வெற்றி

இலங்கை விமானப்படையின்  68 வது   நினைவுதினத்தை  முன்னிட்டு நடத்தப்பட்ட 20வது  விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கடந்த 2019 மார்ச் 01 ம் திகதி முதல் 03ம் திகதி வரை மூன்று கட்டமாக இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின் 68 வது  நினைவை   பிரதிபலிக்கும்  ஒரு நிகழ்வாகும் . உள்நாட்டு வெளிநாட்டு போட்டியாளர்கள்  கலந்துகொண்ட இந்த போட்டியானது கொழும்பில் இருந்து பொலன்னறுவை  பிரதேசம் வரை  சுமார் 414 கி மீ தூரத்தை கொண்டிருந்தது இந்த போட்டியில்  ஆண்கள் பிரிவில் கோப்ரல் புத்திக வர்ணசூரிய வெற்றிபெற்றதோடு மகளிர் பிரிவில்  விமானப்படையின் சிரேஷ்ட வான்  படை வீராங்கனை  பன்சாலி சுலோசனா  வெற்றி பெற்றார்  இந்த போட்டிகளில்  விமானப்படையினர்  ஆண்  பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்.

இந்த போட்டிகளின் வெற்றி பரிசில் வழங்கும் வைபவம்  ஹிங்குரகோட  விமானப்படை  தலத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் விமானப்படை  தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள  டயஸ்  மற்றும்  விமானப்படை  சைக்கிள்  ஓட்ட போட்டி சங்க தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் செயலாளர்  எயார் கொமாண்டர் கித்சிறி லீலாரத்ன  மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கு ஊடக அனுசரணையாளராக  சிரச  ஊடகம் தனது பங்களிப்பை வழங்கி இருந்தது  மேலும்  எல் ஜீ  மற்றும் அபான்ஸ்  நிறுவனமும்  தனது அனுசரணையை வழங்கி இருந்தன.  

'

Women's Race


Awards Ceremony

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.