விமனப்படையினால் முன்னர் பாவிக்கப்பட்ட விமானங்களின் மத்தியில் விமானப்படையின் 68 வது வருட நினைவுதின கொண்டாட்ட நிகழ்வு.

இலங்கை விமானப்படையின்  68 வது   நினைவுதின  கொண்டாட்ட நிகழ்வுகள்  ரத்மலான  அருங்காட்சியகத்தில்  விமானப்படையினரால்  முன்னர் பாவிக்கப்பட்டு  நிறுத்தி வைத்திருக்கும்  விமானங்கள் மத்தியில் வைத்து  கடந்த 2019 மார்ச் 10 ம் திகதி  இடம்பெற்றது .

இதன்போது  விமானப்படையின் முன்னாள் தளபதிகள், மற்றும்  விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும்  அதிகாரிகள் , ஓய்வுபெற்ற அதிகாரிகள்    வாரண்ட் அதிகாரிகள் , விமானப்படை சிரேஷ்ட அதிகாரம் அற்ற அதிகாரிகள் ,  போன்றோர்  விமானப்படையின்  விமானங்கள் மத்தியில்  இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  எமது நாட்டின்  பாதுகாப்பு செயலாளர்  திரு. ஹேமசிறி பெர்னாண்டோ  அவர்கள் கலந்துகொண்டார் அவர்களை  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்கள் வரவேற்றார். மேலும்   முப்படை பாதுகாப்பு பிரதானி  அட்மிரல் ரவீந்திர  விஜேகுணரத்னே அவர்களும் அவரின் பாரியாரும் , இராணுவப்படை  தளபதி  லேப்ட்டினால் ஜெனரல்  மகேஷ் சேனநாயக்க அவர்களும் பாரியாரும் , கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பியால் தி சில்வா  ஆகியோர்  இந்த  நிகழ்வின் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

விமானப்படையின்  வர்ண அணிவகுப்பு படை பிரினால்  வர்ண அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டதோடு  விமானப்படையின்  தளபதிகளால்  ஒன்றிணைந்து  68 வது வருட விமானப்படையின்  நினைவு கேக்  வெட்டப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.