2019 சிறிய கார் விழாவில் விமானப்படை தளபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இலங்கை சிறிய கார் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  2019 ம் ஆண்டுக்கான  சிறிய கார்களின் கண்காட்சி விழா நிகழ்வு FR சேனநாயக்க மாவத்தையில்  கொழும்பு  நகர மண்டபத்தின் முன்னிலையில்  திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் சுமார் 120  சிறுரக கார்கள்  கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரே வகையான கார்கள் 08 பிரிவுகளாக  பிரிக்கப்பட்டு இருந்தன. மேலும் 1950 து  தொடக்கம் தற்போது தயாரிக்கப்பட்ட   BMB  நவீன சிறிய கார்வரை இந்த கண்காட்சியில்  காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்துகொண்டார்   அவர்  அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அனைத்து கார்களையும் பார்வையிட்டர்  அவரை சிறிய கார்கள் சங்க தலைவர் நிமால் குணரத்னே அவர்களும் இந்த கண்காட்சி ஏற்பாட்டுக்குழு தலைவர் நிமால்  விமலசூரிய ஆகியோர் இந்த நிகழ்வில் வரவேற்றனர்.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கு சிறியரக  கார்  செலுத்தும் ஒரு வாய்ப்பும் கிடைக்கப்பட்டது.

மேலும்  இதன்போது கார் பந்தய போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும்  சிறிய கார்களும் இந்த நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.