2018 ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி விருது இலங்கை விமானப்படைக்கு.

2018 ஆம் ஆண்டின் தேசிய உற்பத்தித்திறன் பொதுத்துறையின் பிரிவு  விருது விழாவில் இலங்கை விமானப்படைக்கு  தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது இந்த வைபவம்  பணடார் நாயக   சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பொது நிர்வாகம் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ்  தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மூலம் 2018 தேசிய உற்பத்தித்திறன் விருதுகள்  ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போட்டிக்களுக்காக  கடந்த ஆண்டு சிறந்த  திறன்களை வெளிக்காட்டிய   நிறுவனங்களையே   இந்த  ஆண்டு  தெரிவு செய்துள்ளனர் .

இந்த வருடம்  தங்கப்பதக்கத்தை வென்ற இந்த அணியினர்  இதற்கு முன்னரும்  இந்த போட்டிகளில் வெற்றி பெற்றதோடு  இந்த போட்டியில் 90 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று  இந்த பதக்கத்தை  இந்த ஆண்டு பெற்றுக்கொண்டனர்.  

இந்த போட்டிகளுக்காக  விமானப்படை தலைமை காரியாலய வான் பாதுகாப்பு  பிரிவு,  பயிற்ச்சி  பணிப்பாளர் திணைக்களம் , வெளியுறவு மற்றும் தொலைத் தொடர்பு பொறியியலாளர் பணிப்பாளர், தகவல் தொலைதொடர்பு  பணிப்பகம்  இலங்கை  சீனவராய கல்விப்பீட  ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி  இல 01 விமானி பயிற்ச்சி  படைப்பிரிவினர்  ஹிங்குரகோட இல  07  ஹெலிகொப்டர் படைப்பிரினர்  ஆகியோர் இந்த  போட்டிகளில் பங்கு பற்றினார்.

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி   அவர்களுக்கு  இந்த  பதக்கம்   நாட்டின் பிரதமர் கௌரவ  ரணில் விக்ரம்சிங்க்கே  அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டது .  

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.