பிதுருத்தலாகல விமானப்படையினால் 2019 ம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டுவிழா.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை  முன்னிட்டு    பிதுருதலாகல விமானப்படையினால்  புதுவருட களியாட்ட விழா கடந்த 2019 ஏப்ரல் 06 ம் திகதி  பிதுருதலாகல விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ்   இடம்பெற்றது.

இந்த இலங்கை தீவின் உயர்ந்த இடத்திலே இந்த நிகழ்வு இடம்பெற்றது என்பது சிறப்பம்சமாகும்  இதன்போது  ''கிறிஸ் மரம் ஏறும்'' நிகழ்வு ''முட்டியடித்தல்'' நிகழ்வு  கயிறிழுத்தல்  உட்பட   நாட்டுப்புற விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது பிதுருதலாகல விமானப்படையின்  அனைத்து  படை அங்கத்தவர்களும்  கலந்துகொண்டதோடு அவர்களின்  குடும்ப உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர்  மேலும்  நுவரெலியாவின் பிஷப் டேனியல் சிறுவர் இல்லத்தின் குழந்தைகள் மற்றும் பிரதேசத்தின் பள்ளிப் பிள்ளைகளுக்கும்  இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்தது.
    

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.