2019 ம் ஆண்டுக்கான இடைநிலை வலைப்பந்து போட்டிகளில் தியத்தலாவ விமானப்படை தளம் வெற்றி.

2019 ம் ஆண்டுக்கான விமானப்படை  இடைநிலை  வலைப்பந்து  போட்டிகள்  கடந்த 2019 ஏப்ரல் 09 ம் திகதி  நிறைவுக்கு வந்தது இதன்போது    தியத்தலாவ   விமானப்படையினர் சீனவராய  விமானப்படையினரை  எதிர்கொண்டு  35-12 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றனர்.  இந்த போட்டி கொழும்பு விமானப்படை சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது.

சீனவராய  விமானப்படை கடேட் பெண் அதிகாரி  குரூஸ்  அவர்கள் சிறந்த ஷூட்டர் விருதை பெற்றார், சிறந்த தற்காப்பு  வீராங்கனையாக  தியத்தலாவ  விமானப்படையின்  அடிப்படை பயிற்சி பெரும்  விமானப்படை வீராங்கனை விக்ரமரத்ன அவர்களும்,   சிறந்த நடுநிலை வீராங்கனையாக  சிரேஷ்ட விமானப்படை  வீராங்கனை  சுஜானி  தெரிவு செய்யப்பட்டார்.

இந்த போட்டிகளில் பிரதம அதிதியாக  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி. அனோமா ஜயம்பதி அவரகள் கலந்துகொண்டார் மேலும் வலைப்பந்து விளையாட்டு பணிப்பாளர்  குரூப் கேப்டன்  சுரேகா டயஸ் அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரவீராங்கனைகள்  கலந்துகொண்டனர்.  

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.