விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் 13 பேருக்கு விசிஸ்ட சேவா விபூஷண பதக்கம் கிடைக்கப்பெற்றது.

முப்படையை சேர்ந்த 65 அதிகாரிகளுக்கு ( சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற)  விசிஸ்ட  சேவா விபூஷண பதக்கம் இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் தலைவரும்  முப்படை தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த 2019 மே 22 ம் திகதி  வழங்கப்பட்டது.

இதன்போது  விமானப்படையின்  சிரேஷ்ட அதிகாரிகள் 13 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது  விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் மற்றும் துணைத்தளபதி  எயார் மார்ஷல் மொஹான் தி சொய்சா  மற்றும் சில அதிகாரிகளும் இதில் அடங்குவர் .இதன்போது  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி ஆகியோர் கலந்து கொண்டன.

இந்த விசிஸ்ட  சேவா விபூஷண பதக்கம்  ஆனது  முப்படையில் 25 வருட கால சேவையை நிறைவுசெய்தவர்களுக்கு  இந்த  பதக்கம் வழங்கப்படுவதோடு  அவர்களின் பெயருக்கு பின்னல் VSV  என்ற பட்டமும் கிடைக்கப்படும்.

கீழே ஆங்கில மொழிபெயர்ப்பில் அவர்களின் பெயர் விபரங்களை காணலாம்.  

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.