விமானப்படையின் இல 111 ம் ஆளில்லாவிமான படைப்பிரிவின் 11 வது வருட நினைவுதினம்

வவுனியா விமானப்படை தளத்தில்  அமைந்துள்ள இல 111 ம்  ஆளில்லாவிமான  படைப்பிரிவின்  11 வது  வருட நினைவுதினம். கடந்த ஜூன் 01 ம் திகதி  கொண்டாடப்பட்டது  அன்றய தினம்  இல 111 ம்  ஆளில்லாவிமான  படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி  விங் கமாண்டர்  வன்னிநாயக அவர்களினால்  காலை அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

ஆளில்லாவிமான  படைப்பிரிவு  வவுனியா விமானப்படை தளத்தில்  1996 ல்  இல 11 ம் படைப்பிரிவாக  பிலைட்  லெப்ட்டினல்  தளகள  அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது  அதன் பிறகு 2008ம் ஆண்டு இல 111 மற்றும் 112 ம் ஆளில்லாவிமான  படைப்பிரவு  இரண்டு  படைப்பிரிவுகளாக  வவுனியா மற்றும் அனுராதபுர  படைத்தளங்களில் ஆரம்பிக்கபப்ட்டன.

கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது  இல 111 ம்  ஆளில்லாவிமான  படைப்பிரிவின்  சர்ச்சர்  எம் கே 11 ரக  ஆளில்லவிமானம்  பயங்கவராத நடவடிக்கைகளை  அவதானிப்பதற்கு  சிறந்த சேவையை வழங்கி இருந்தது.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு 2019 மே 17 ம் திகதி  மடுகந்த விகாரையில் புத்த பெருமானின்  தந்தம்  வைக்கப்பட்டுள்ள  புனித பகுதியை  எல் ஈ டி மின்குமிழ் கொண்டு அலங்கரிக்கப்பட்டதோடு  படைப்பிரிவின்  அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின்  பங்கேற்பில்  சிரமதான  நிகழ்வும் இடம்பெற்றன.

இந்த படைப்பிரிவு ஆரம்பம் தொடக்கம் இன்றுவரை  பொறுப்புடன் சேவை செய்த சிவில் ஊழியர்களுக்கு  சான்றுதல்களும் வழங்கப்பட்டன. ஒய்வு  பெற்ற  வர்றேன்ட் அதிகாரிகள் மற்றும்  ஒழுக்க படைப்பிரிவின் ஒழுக்க கட்டுப்பட்டு வாரொண்ட் அதிகாரிகளுக்கும்  கௌரவிக்கப்பட்ட  விருதுகளும் வழங்கப்பட்டன.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.