கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவின் 16 வது நினைவு தினம்.

கட்டுநாயக்காவில் அமைந்துள்ள  சிவில்  பொறியியல்  தளத்தின்  16 வது  நினைவு தினம் 2019 ஜூன் 13 ம் திகதி இடம்பெற்றது.

அந்த சிவில் பொறியியல் தளத்தில்  இதுவரை சிவில் பொறியியல் 20அதிகாரிகளும்  1432 சிவில் பொறியியல் துறைசார்  பயிற்ச்சி  பெற்ற  படை வீரர்களும்  கடமையாற்றுகின்றனர்.

இலங்கை விமானப்படையின்  தலைமைக்காரியாலயத்தின்  திட்டத்தின்படி   விமானப்படையின்  அனைத்து வேலைத்திட்டம்கள்  மற்றும் புனரமைப்புத்திட்டம்கள் என்பன சிவில் பொறியியல் தளத்தின் மூலமே இடம்பெறுகின்றது.

நினைவு தினத்தன்று  சிவில் பொறியியல் தளத்தின் கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் முத்துதந்த்ரி அவர்களினால்  உரை நிகழ்த்தப்பட்டதை அடுத்து சமய நிகழ்வுகளும் மற்றும்  அன்னதான நிகழ்வும்  கட்டுநாயக்க  பௌத்த விகாரையில்  சேவையாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் 450 பேரின்  பங்கேற்பில்  இடம்பெற்றன.

மேலும் ஜூன் 07 ம் திகதி 100 பேர்   இரத்ததானம் வழங்கும்  நிகழ்வும்  கட்டுநாயக்க  விமானப்படை  வைத்தியசாலையில்  ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது  இந்த ஏற்பாடுகளை  கட்டுநாயக்க சிவில் பொறியியல் தளம் மற்றும் நீர்கொழும்பு  தேசிய வைத்தியசாலையும் இணைந்து ஏற்றப்பாடு செய்திருந்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.