அடிப்படை பயிற்சியாளர்கள் வெளியேற்று வைபவம் தியத்தலாவ விமானப்படை அடிப்படை பயிற்சி பாடசாலையில்

இலங்கையின்  வான் பரப்பை பாதுகாப்போம் என்ற  இலக்கை கொண்டு செயற்படும்  இலங்கை விமானப்படையின்  புதிதாக இணைந்து பயிற்சிகளை பெற்று  தற்போது  விமானப்படை  சேவையில் இணைவதற்காக  தயார் நிலையில் உள்ள  39 கடேட் அதிகாரிகள் மற்றும் 426 விமானப்படை  வீரவீராங்கனைகளுக்குகான  அடிப்படை பயிற்சி வெளியேறும்  நிகழ்வு கடந்த 2019 ஜூன் 14 ம் திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் பங்கேற்றபில்  விங் கமாண்டர் புத்திக பண்டார அவர்களின் தலைமையில் தியத்தலாவ  விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது.  

இதன் போது  இல 64 அடிப்படை ஆண் அதிகாரிகள்,  மற்றும் இல 16 அடிப்படை பெண்  அதிகாரிகள் பயிற்சிநெறியும் , 168 வது நிரந்தர  அடிப்படை ஆண் படைவீரர்கள் , இல 38 வது  அடிப்படை நிரந்தர பெண் படை வீராங்கனைகள் ,இல 131மற்றும் 14 தட்காலிக்க  ஆண் பெண் படை வீரவீராங்கனைகள் அடிப்படை  பயிற்ச்சி  நெறிகள் ஆகியன  இந்த நிகழ்வின் போது அணிவகுப்பு மரியாதை  நிகழ்வினையும் விங் கமாண்டர் புத்திக பண்டார அவர்களின் தலைமையில் நடத்தினர் .

இந்த நிகழ்வின் போது  விமானப்படை  பேண்ட்  வாத்திய குழுவினரின்  பேண்ட்  அணிவகுப்பும்   பயிற்றசை நெறியை நிறைவு செய்த  அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின்   உடற்பயிற்ச்சி  கண்காட்சி மற்றும் சண்டை பயிற்சி மற்றும் கலை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை  அதிகாரி மற்றும் பணிப்பளர்கள்   தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள்  மற்றும் இராணுவ, கடற்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.