விமானப்படையின் போர் வீரர்களுக்கான வருடாந்த பிரித் நிகழ்வு.

வான் பரப்பை பாதுகாப்போம் எனும்  இலக்கை கொண்டு செயற்படும் இலங்கை  விமானப்படையின்  உயிர் நீத்த போர்வீரர்களுக்கான அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஏக்கல  விமானப்படை  தளத்தில் ஏற்பாடு செய்து இருந்த சர்வ இரவு பிரித்  நிகழ்வு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன் பொது விமானப்படையின்  இறந்த ,காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற தற்போது சேவையில் உள்ள போர்வீரர்கள் அனைவரையும் நினைவியு கூறும் வகையில் கடந்த 2019 ஜூலை 12 ம் திகதி சர்வ ராத்திரி பிரித் வைபவம் ஏட்பாடு செயப்பட்டு இருந்தது.

அம்பராபுர மஹா நிக்காயா தர்மபால வங்சாலங்கார சத்தர்ம கீர்த்திசிறி திரிபீடக விசார்தித அக்ரமாக பண்டித கொட்டுகொட தம்மாவாச தேரர் அவர்களின் தலைமையில் ஏனைய  தேரர்களின் பங்கேற்பில்பிரத் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும் பணிப்பளார்கள்  ஏக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜூட் பெரேரா மற்றும் விமானப்படை அதிகாரிகள் படைவீரர்கள் உயிர்நீத்த  விமானப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.