பூவரசங்குளத்தில் வன்னி விமானப்படை தளத்தினால் புதிதாக கட்டப்பட்ட தொழில் பயிற்சி மையத்தை ஒப்படைத்தல்.

விமானப்படையினால்  புதிதாக கட்டப்பட்ட தொழிற்பயிற்சி மையம் 2019 ஜூலை 15 ஆம் திகதி இலங்கை விமானப்படை வன்னி ரெஜிமென்ட்  பயிற்சி பபாடசாலையின்  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் கலுஆராச்சி அவர்களினால் வவுனியா தொழிற்பயிற்சி ஆணையகத்தின் துணை பணிப்பாளர்  வி.கனகசுந்தரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமானப்படையின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிட வேலைதிட்டத்திற்கான நிதி  விநியோக நல்லிணக்கம்  பொறிமுறையைப் சார்ந்த ஒருங்கிணைப்பு செயலகத்தினால் அளிக்கப்பட்டது.

2018 அக்டோபர் 27 ஆரம்பிக்கப்பட்ட  இந்த  கட்டிட வேலை விமானப்படை  சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் 2019 ஜனவரி 06 ம் திகதி நிறைவுக்கு வந்தது.

இந்த நிகழ்வில் பிராந்திய விவகார ஒருங்கிணைப்பு பிரிவு பணிப்பாளர் திரு.சஞ்சீவ விமலகுணரத்ன அவர்களும் வன்னி ரெஜிமென்ட்  பயிற்சி பாடசாலையின்   அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.