சேவா வனிதா பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம்

இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் வருடாந்த  பொதுக் கூட்டம் கடந்த 2019 ஆகஸ்ட் 02 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலய  கேட்போர்கூடத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் தலைமையில்   இடம்பெற்றது  மேலும் இந்நிகழ்வில் விமானப்படைகளின்  சேவா வனிதா பிரிவின் தலைவிகள் ,மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டனர்  

ஆரம்ப நிகழ்வாக விமானப்படை சேவா வனிதா கீதம் ஒலிக்கப்பட்டு  ஆரம்பிக்கப்பட்டது .அதன்பின்பு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது  அதனை  அதனைத்தொடர்ந்து  கடந்த வருட கூட்டறிக்கை  செயலாளர்  ஸ்கொற்றன் ளீடர்  பியூமி ஜயசுந்தர அவர்களினால் வாசிக்கப்படது  பொருளாளர் ஸ்கொற்றன் ளீடர்  இளங்ககோன் அவர்களினால் கடந்த வருட வேலைத்திட்டம்கள்  நினைவு படுத்தப்பட்டது  இறுதியில் சேவா வனிதா பிரிவினால்  2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.