மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விமானப்படை வெற்றி.

கடந்த 15.08.2011ம் திகதியன்று கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கொழும்பு பார்க்லிங்ஸ் விளையாட்டு கழகத்தினை  தோல்விஅடையச்செய்து வெற்றியீட்டியது.

மேலும் விமானப்படை அணியினர் பார்க்லிங்ஸ் கிரிக்கெட் கழகம்,கோல்ட்ஸ் கழகம்,தென்மாகாண மகளிர் அணி, நாரம்மல கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆகியவற்றை தோல்வியடையைச்செய்து இறுதிப்போட்டியில் பார்க்லிங்ஸ் அணியினை வெற்றியீட்டி கிண்ணத்தினை கைப்பற்றியது.

எனவே இறுதிப்போட்டியில் சாமர செனவிரத்ன , நிரோஷா விக்ரமசிங்க, சானக தில்ருக்ஷி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் போட்டியினை வெற்றிகொண்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இங்கு பிரதம அதிதிகளாக விமானப்படை விளையாட்டுத்துறை பொறுப்பதிகாரி "எயார் கொமடோர்" ஹர்ஷ பெர்னான்டு  ,விமானப்படை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் "எயார் கொமடோர்" சஞ்சக விஜேமான்ன , செயளாலர் "விங் கமான்டர்" சுரேஷ் ஜயசிங்க என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.