தனித்துவமான கலாச்சார இசை களியாட்டம்

சீன குடியரசின் தூதரகம் மற்றும் இலங்கை விமானப்படையின்  இணைந்து  சீன கலாச்சார மையத்தால்  முன்வைக்கப்பட்ட  "தனித்துவமான கலாச்சாரம் இசை களியாட்டம்"  இசை  நிகழ்வு கடந்த 2019செப்டம்பர் 29 ம் திகதி ஏக்கல   தொழில் பயிற்ச்சி  விமானப்படை பாடசாலையில்  இடம்பெற்றது   இந்த நிகழ்வில் சீன நாட்டின் ஓபரா மற்றும் விமானப்படை நாடக நாட்டிய குழுவினர் சீன இசைக்குழு மற்றும் இலங்கை விமானப்படை, கலை நிகழ்ச்சிகளின் பணிப்பாளர்  ஆகியோரின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இரண்டு இசைக்குழுக்களும் பாரம்பரிய இசை மற்றும் பிரபலமான இசையின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளன. இந்தநிகழ்வில்  பிரதான அதிதியாக  விமானப்படை  தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும் சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி. பிரபாவி  டயஸ் அவர்களும்  இந்த நிகழ்வின்  பிரதான அதிதிகளாக  கலந்துகொண்டனர்.

விமானப்படை பணிப்பளர்கள், ஏக்கல விமானப்படை  கட்டளை அதிகாரி, மற்றும் சீன தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் சீன கலாச்சார மையத்தின் இயக்குனர் திரு யூ லீவன்  ஆகியோர்  இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக கலந்துகொண்டனர் .மேலும் விமானப்படை  அதிகாரிகள் படைவீரர்களும் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.