'சிறுவர்களின் வெற்றிக்கு ஒரு நட்பு நாடு' உலக சிறுவர் தின கொண்டாட்டம் -2019

உலக  சிறுவர் தினத்தைமுன்னிட்டு  இலங்கை  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் மூலம்  ஏற்பாடு  செய்யப்பட்ட   சிறுவர் தின கொண்டாட்ட விழா  கடந்த 2019 அக்டோபர் 01ம் திகதி  கொழும்பு  விமானப்படை   ரைபிள்  கிறீன்  மைதானத்தில்  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது .இந்த நிகழ்வுகள்   விமானப்படை   சேவா வனிதா  பிரிவின்  தலைவி  திருமதி.   மயூரி பிரபாவி  டயஸ்  அவர்களின் வழிகாட்டலின் கீழ்    ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த  நிகழ்வில்  சுமார் 750க்கும் மேற்பட்ட  சிறுவர்சிறுமிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுகள்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. பிரபாவி டயஸ் அவர்கள்  மற்றும் 2018ம் ஆண்டு கா.போ.சா தர பரீட்சையில்   சிறந்த பெறுபேற்றை பெற்ற  நிலக்னா திசிவரி  வருசவிதாரண  ஆகிய  மாணவியின்  வருகையுடன் இந்த  நிகழ்வு  ஆரம்பிக்கப்பட்ட்டது.

இந்த நிகழ்வில்   கலந்துகொண்ட சிறுவர்சிறுமிகளுக்காக    விளையாட்டு தொகுதிகள்  மற்றும் விமானப்படை  நாய்களில் சாகசங்கள்  மற்றும்  பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன்பொது  வவுனியா மகாகச்சகோடிய  அரச பாடசாலை  மாணவர்கள் 53 பேர்  இந்த நிகழ்வை  கண்டுகளிக்க வருகைதந்துள்ளனர் இதுவே அவர்கள் முதல்முறை  கொழும்பு நகரத்தில் இப்படுத்தியான ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட நிகழ்வாகும் .இதனபோது அவர்களுக்கு  ரத்மலானையில் அமைந்துள்ள  விமானப்படை  அருங்காட்சியகத்தை  காண்பதற்கான ஒருவாய்ப்பு அழிக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் மூலம் பங்குபற்றிய  சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில்  கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகரி மற்றுமதிகரிகள்  சேவைவனித்த பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும்படி வீரர்கள்  பெற்றோர்கள்  போன்றோர் கலந்துகொண்டனர் . 

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.