இலங்கை விமானப்படை சுகாதார வைத்திய சேவை பிரிவினரால் அவசர மருத்துவ சிகிச்சை குறித்த பயிற்சிப் பட்டறை.

ஒரு நோயாளி அல்லது  விபத்துக்குள்ளான ஒருவருக்கு  குறுகிய காலப்பகுதியில்  செய்யும்  அவசரகால மருத்துவம் என்பது விரைவான மருத்துவ தீர்வாகும். இது எல்லா வயதினருக்கும்  நோயாளிகளுக்கும்  அவசர சிகிசிச்சை மூலம் பயனளிப்பதோடு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு இது முக்கியமான ஒரு அம்சமாகும் .

இராணுவ  வைத்திய  பணியாளர்களுக்கு  அவசர சிகிசிச்சையின் போதும் , நாட்டில் ஏற்படும் அனர்தங்களின்போதும் விழிப்புணரவு மற்றும்  தயார்நிலை பெறுவதற்கு  இந்த பயிற்சி அறிவு  மிக முக்கியமானதாகும்.

இதனை அடிப்படையாக கொண்டு விமானப்படை   வைத்திய  பணியாளர்களுக்கு  அவரக்ளுக்கு  இந்த அவசர சிகிசிச்சை மருத்துவ அறிவை மேன்படுத்திடும் வகையில்  கடந்த 2019 அக்டோபர்  05ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை  வைத்தியசாலை வளாகத்தில் விமானப்படை  சுகாதார வைத்திய  சேவை பிரிவினரால் பயிற்ச்சி  பட்டறை ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

விமானப்படை  சுகாதார பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  ஜெயவீர மற்றும் கட்டுநாயக்க வைத்தயசாலை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அபயசேகர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்திய  பணியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்  இராணுவ பின்னணி அவசர மருத்துவத்தில் பல்வேறு பாடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பல விரிவுரைகளைக் இந்த நிகழ்வு கொண்டிருந்தது.

மேலும் இந்த நிகழ்வில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் வெளியிடங்களில்  அவசர சிகிசிச்சை  வழங்குவது பற்றிய முகாமைத்துவ நுண்ணறிவு பற்றி சிறந்த விரிவுரைகள் அளிக்கப்பட்டன. கடுமையான நோயுற்ற மற்றும் காயமடைந்த நோயாளிகளை நிர்வகிப்பதில் பங்கேற்பாளர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக பல திறன் மையங்களை இந்த பட்டறை உள்ளடங்கப்பட்டது .

இந்த பயிற்சி பட்டறையில் இலங்கை அவசர மற்றும் மீட்பு மருத்துவக் கல்லூரியின் தலைவரும் அவசர மருத்துவர் டாக்டர் ஹரேந்திர குரே  அவர்களில் மூலம் இந்த நிகழ்வு முன்னிலை நின்று நடத்தப்பட்டத்து .  மேலும் இந்த நிகழ்வில் விரிவுரையில் டாக்டர் கணேஜா சமராஜீவா, டாக்டர் தெட்சனமூர்த்தி பிரசாந்த், டாக்டர் சனத் ராஜகருணா, டாக்டர் அர்ஷனா அரபாலா, டாக்டர் துசிதா குமாரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற  நிகழ்வு இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும் மேலும் இன்னும் 03 அமர்வுகள் வெவ்வேறு  பகுதிகளில் இடம்பெற உள்ளன

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.