விமானப்படை ஆண்கள் ஹொக்கி அணியினர் 20 வது பழைய விஜயன்ஸ் சவால் கிண்ண போட்டித்தொடரில் வெற்றிபெற்றனர்.

மாத்தளை எட்வார்ட் பார்க்  ஹாக்கி மைதானத்தில்  இடம்பெற்றது  20வது  பழைய  விஜயன்ஸ்  சவால் கிண்ண போட்டித்தொடரில்  ஏ,மற்றும் பீ  பிரிவில் ஆண்கள் அணியினர்  வெற்றிக்கிண்ணம் மற்றும்  தட்டுகேடயம்  என்பவற்றை முறையே வெற்றிபெற்றனர் .

 இந்த போட்டித்தொடரில்  விமானப்படை  ''ஏ''  அணியினர்   போலீஸ் அணியினரை எதிர்கொண்டு  1-0 எனும் கணக்கில் வெற்றிபெற்றனர்    விமானப்படை '' பீ '' அணியினர்  கடற்படை அணியினர் எதிர்கொண்டு 4-2 எனும் புள்ளிகள் கணக்கில் வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.

இந்த போட்டியில்   விமானப்படை   ஹோக்கி அணியின் தலைவர்  தலைமை வான்படை வீரர்  ஆனந்த அவர்கள்  இந்த போட்டித்தொடரின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த இறுதிபோட்டித்தொடரில்  பிரதான அதிதியாக  இலங்கை ஹோக்கி  சம்மேளனத்தின்  முன்னாள்  சிரேஷ்ட  பதில் பொலிஸ்மா அதிபர் ( ஒய்வு ) திரு. சுமித் எதிரிசிங்க அவர்கள்  கலந்து கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.