இலங்கை விமானப்படை வைத்தியசாலைமூலம் ஆரோக்கிய மருத்துவ சிகிச்சையகம்

கொழும்பு இலங்கை விமானப்படை மருத்துவமனை  மூலம் கடந்த 2019  நவம்பர் 1 ம் திகதி  இலங்கை  விமானப்படை பெண்கள் ,மற்றும் படைவீரர்களின்  மனைவிமார்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும்  சுற்றுப்புறத்தில்  உள்ள  குடும்ப பெண்கள் ஆகியோரின் பங்கேற்பில்  அப்பகுதியின் குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்துடன் இணைந்து ஒரு ஆரோக்கிய மருத்துவ  சிகிச்சையகம்  நடைபெற்றது.

விமானப்படை  சுகாதாரப்பிரிவின்  பணிப்பளார் அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்ற  இந்த நிகழ்வானது   விமானப்படை   பணியாளர்கள் மற்றும் அவர்களின்  குடும்ப அங்கத்தவர்கள்  மற்றும் சிவில் சேவையாளர்கள்   ஆரோக்கிய மட்டத்தை உயர்த்துவதும்  மற்றும் மகளிர் மருத்துவ ஆரோக்கியத்தை மேம்படுத்த  ஆலோசனைகள் வளங்கள் போன்றவை  இதன் ,முதன்மை நோக்கமாகும்

பெண்களின் உடல்நல பரிசோதனை  செய்ய விரும்புவோருக்கு இந்த சேவை அப்பகுதியின் குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகம்  மற்றும் விமானப்படை  அனுபவம் வாய்ந்த பெண் சுகாதார செவிலியர்களால்  வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் வைத்தியசாலை கட்டளை அதிகாரி  விங் கமாண்டர்   பத்மபெருமா , சமூக ஆலோசகர்  மருத்துவர் விங் கமாண்டர் ஆர் புசோ,   பகுதி மருத்துவ அதிகாரி (எம்.எச்) டாக்டர் டி ஹெட்டிலேஜ் , விசேட வைத்தியர் டாக்டர்  சிசிர கொஸ்தா  ,ஆலோசகர் நிபுணர்  டாக்டர் எல்.ஜே.ஜெயவீரா  ஆகியோரின் பங்கேற்பில் இடம்பெற்றது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.