சேவா வனிதா பிரிவின் வீடு வழங்கும் வைபவம்

இலங்கை விமானப்படை "சேவா வனிதா " பிரிவின் அனுலா பெர்னாந்து அபிவிருத்தி திட்டதின் கீழ் பயங்கரவாத தாக்குதலில் மரணித்த படைவீரர்களுக்கு வீடுகள் அன்பளிப்பு செய்யும் திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த 2007 மார்ச் 01ம் திகதியன்று அநுராதபுரம் விமானப்படை முகாமில் இடம்பெற்ற PT 6 விமான விபத்துத்தில் உயிரிழந்த "பிளைட் லெப்டினன்" இந்துரவி முத்துகுமாரன அவர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

எனவே இவ்வைபவம் 2011 செப்டம்பர் 02ம் திகதியன்று இல. 202B 2/1, திக்கேனவத்த, குடாமடுவ வீதி, மத்தேகொட, கொட்டாவ பிரதேசத்தில் இலங்கை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ் வைபவத்தில் விமானப்படையின் நலன்புரி இயக்குனர் "எயர் வைஸ் மார்ஷல்" W.A. சில்வா உட்பட விமானப்படையின் இயக்குனர்கள், அதிகாரிகள், படை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.