ரத்மலான விமானப்படை தளத்தின் வைத்தியசாலை தனது 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .

ரத்மலான   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  வைத்தியசாலையின்   10 வது  வருட  நிகழ்வுகள்  கடந்த 2019   நவம்பர் 11 ம் திகதி     கட்டளை அதிகாரி   அவர்களின் வழிகாட்டலின் கீழ்    அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது .

அன்றய தினம்  காலை அணிவகுப்பு  பரீட்சனை  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அல்விஸ் அவர்களினால்  பரிட்சிக்கப்பட்டது

ஆண்டு நிறைவை முன்னிட்டு   பெண்களுக்கான  இலவச மருத்துவமுகாம்  ஓன்று   2019 நவம்பர்  06 ம் திகதி    இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  தேசிய புற்றுநோய் கண்டறிதல் மய்யம் ,மற்றும் MOH அலுவலகம் தெஹிவாலா எச்.ஐ.வி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்  மற்றும் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கலுபோவில.என்பவற்றில் பணிபுரியும்  வைத்தியர்க்ள மற்றும் பணியாளர்கள்   கலந்துகொண்டனர்.

இதன் போது  கலந்துகொண்டவர்களுக்கு  பல  நோய்கள்  தொடர்பான    தெளிவுரைகள் மற்றும் பரிசோதனைகள் என்பன   வழங்கப்பட்டது  இதனபோது சுமார் 150 பேர் கலந்துகொணடனர்  இதில் 38 பேர்களுக்கு  நோய்அறிகுறிகள்  கண்டறியப்பட்டு அவர்களுக்கு  மருத்துவம் அளிக்கப்பட்டது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.