விமானப்படையின் "எயார் மூமன்ட்" (விமான நடமாட்ட சேவைகள்) வளாகம் திறப்பு விழா
விமானப்படை கடுநாயக முகாமினில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 'எயார் மூமன்ட்' (விமான நடமாட்ட சேவைகள்) வளாகம் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
எனவே விழாவானது விமானப்படைத்தளபதியின் வருகையைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படிகுத்துவிளக்கேற்றியதன் பின்னர் ஆரம்பமாகியது. மேலும் இந்நிகழ்வில் விமானப்படை நிர்வாக இயக்குனர், கடுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரணில் குருசிங்க உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முதலாவது பயணியாக மாண்புமிகு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் விமானசேவையை பெற்றுக்கொண்டார். மேலும் இரண்டாம் நாள் பயணியாக புகழ்சான்ற கிரிக்கெட் வர்ணனையாளர் டோனி கிரெக் அவர்களும் பயணித்தைமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








































