ஒலிம்பிக் போட்டிகள் மூலம் நிலையான தலைமை.

இலங்கை விமானப்படை விளையாட்டு சம்மேளனம் மற்றும்  விளையாட்டு பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒலிம்பிக் போட்டிகள் மூலம் நிலையான தலைமை எனும்   தலைப்பில் விமானப்படை  விளையாட்டு பிரிவை  மேன்மைப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டறை  நிகழ்வு ஓன்று 2019  டிசம்பர் 16 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலத்தில் இடம்பெற்றது.

சிறந்து விளக்கம், மரியாதை மற்றும் நட்பு ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய நோக்கங்களாகும்  மேலும் இந்த பட்டறையின் நோக்கம் ஒலிம்பிக்கின் அறிவை மேம்படுத்துவதும், விளையாட்டு மூலம் நிலையான தலைமையை வளர்ப்பதற்கு ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படை மதிப்புகளை எவ்வாறு கற்பிப்பது என்பதும் ஆகும்.

இந்த பட்டறைக்கு சிரேஷ்ட  விளையாட்டு ஆலோசகர்குரூப் கேப்டன்  நலின் டி சில்வா தலைமை தாங்கினார், அவர் ஒலிம்பிக் மற்றும் நிலையான தலைமைத்துவத்தின் விரிவுரையாளராகவும் உள்ளார்.

மேலும்,  பழங்குடித் தலைவர் வனஸ்பதி ஊறுவர்க  வன்னிலாத்தோ  அவர்களினால்   விளையாட்டு மற்றும் பாரம்பரியத்தின் கருப்பொருள் பற்றி விளக்கப்பட்டது  மேலும் மூத்த நடனக் கலைஞர் டாக்டர் சன்னா விஜேவர்தனேயும் விளையாட்டு மற்றும் தாளம் என்ற கருப்பொருளைப் பற்றி விரிவுரை செய்தார்.

கிரேக்கத்தில் உள்ள பண்டைய ஒலிம்பியா சர்வதேச ஒலிம்பிக் அகாடமியில் ஒரு நிகழ்ச்சியை வென்ற மகாமயா வித்யாலயா மற்றும் சிரிமவோ பாலிகா வித்யாலயா ஆகிய மாணவர்களும் ஒலிம்பிக் மற்றும் மென்மையான இராஜதந்திரம் குறித்த அறிவை விளையாட்டு நிர்வாகிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு சேவா வனிதா பிரிவுத் தலைவர் திருமதி மயூரி பிரபவி டயஸ் தலைமை தாங்கினார் மற்றும் விமானப்படை தலைமை எயார் வைஸ் மார்ஷல்சுதர்சன பதிரன .மற்றும் பணிப்பளர்கள்  விளையிட்டு சம்மேள அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.