13 வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கான பாராட்டு விழா வைபவம் .

13 வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில்  பதக்கம் வென்ற விமானப்படை  வீரர்களுக்கான  பாராட்டு விழா வைபவம் கடந்த 2019 டிசம்பர் 30 திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.  தளபதி அவர்களினால் அவர்களுக்கு  சன்மானங்கள் வழங்கப்பட்டது.

3 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணியினர்  40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்களுடன் 251 பதக்கங்களை வென்றது. இதில் விமானப்படை சார்பாக  5 தங்கம், 14 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் உட்பட 41 பதக்கங்கள்  வெற்றிகொள்ளப்பட்டன.

இந்த மதிப்புமிக்க நிகழ்வின் மூலம்  விமானப்படைக்கும்  மற்றும் தாய்நாட்டிற்கு அதிக மரியாதை செலுத்தியவிமானப்படை விளையாட்டு வீரர்களின் தடகள திறமைகளை மேம்படுத்துவதற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விமானப்படைத் தலைமைத் தளபதி,எயார்  வைஸ் மார்ஷல் சுதர்ஷனா பதிரன, விமானப்படை பணிப்பளார்  குழு அதிகாரிகள் மற்றும் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.