இலங்கை விமானப்படையினர் 72 வது சுதந்திர தினத்திற்கு தயாராகின்றனர் .

72 வது சுதந்திர தின அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகை  கடந்த்ய 2020 பெப்ரவரி  03  ம் திகதி  சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.  இதன்போது  விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ்  இந்த நிகழ்வை நேரில் பார்வையிட்டார்  மேலும் இந்த நிகழ்வில் எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பதிரன  மற்றும் விமான செயல்பாடுகள் பணிப்பளார் எயார்  வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க, தரை செயல்பாடுகள் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் லியோனார்ட் ரோட்ரிகோ, முப்படைகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டும், இலங்கை விமானப்படை சார்பாக 55 அதிகாரிகள், 832 விமான வீரர்கள் மற்றும் விமானப் பெண்கள் ஆகியோர் இந்த மரியாதை  அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர் .

மேலும்  இலங்கை  விமானப்படை  விமானங்களின்  சாஹசமக்களும்  இடம்பெறவுள்ளது  ஒரு பெல் 212 ரக  ஹெலிகாப்டர்,3 பெல் 412 ரக   ஹெலிகாப்டர்கள், 3 எம்ஐ -17ரக   ஹெலிகாப்டர்கள், 4 வை  -12 ரக  ஒளி போக்குவரத்து விமானம், ஒரு பி -200 கண்காணிப்பு விமானம்,எம்.ஏ -60 போக்குவரத்து விமானம்,5 PT-6 அடிப்படை பயிற்சி விமானம்,3 கே -8 அட்வான்ஸ் ஜெட் டிரெய்னர் விமானம் , 3 எஃப் -7 போர் விமானங்கள் என்பன இடம் பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.