2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி கோல்ப் போட்டிகள்

இலங்கை விமானப்படை  மற்றும்  ஈகிள் கோல்ப் லிங்க் ஆகியோரின் அனுசரணையில் 2020 ம் ஆண்டுக்கான  விமானப்படை தளபதி வெற்றிக்  கிண்ண  கோல்ப்  போட்டிகள் கடந்த 2020 பெப்ரவரி 22ம் திகதி    திருகோணமலை சீனவராய விமானப்படை தளத்தின் கோல்ப் மைதானத்தில்  முடிவுக்கு வந்தது   

இந்த போட்டியில் 102  உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.மேலும் மியான்மர்  மற்றும்  இந்தோசினேசியா  தூதுவர்களும் கலந்துகொண்டமை  விசேட அம்சமாகும் .   ஈகிள் கோல்ப் லிங் மைதானத்தில் ‘Handicap Rules’ முறையின் கீழ் காலை 07 00 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது

விமானப்படை தளபதி வெற்றிக்  கிண்ண  கோல்ப்  போட்டிகளில்  ஆண்கள் பிரிவில் 40 புள்ளிகளை பெற்று நீலு ஜெயதிலகே  சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார் 36 புள்ளிகளை பெற்று ஷாவ் லிங்க்  02 ம் இடத்தை பெற்றுக்கொண்டார் அத்துடன் நீண்டதூர பியோகத்துக்கான விருதை  லெப்டினன்ட் கமாண்டர் எச்.எம்.உதாவட்டா மற்றும் திரு. ஜாவோ லியாங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்   இதே நேரம்  பெண்கள் பிரிவில் 31 புள்ளிகளை பெற்ற  கொண்ட. திருமதி ரோஷினி சங்கனி 02ம் இடத்தை   பெற்றுக்கொண்டார் .

இம்முறை  வெற்றியாளர்களுக்கான  பரிசுகளை வழங்கும் வைபவம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  சேவைவனித்த பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரினால்   வழங்கிவைக்கப்பட்து   இதன்போது  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல்  சதர்சன பத்திரன   மற்றும்  விமானப்படை கோல்ப் குழுவின் தலைவர் போட்டிஏற்டபாட்டுக்குழுவின் தலைவருமான எயார் கொமடோர் ரண்சிங்க  சீனவராய  பதில் கட்டளை அதிகாரி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.