இலங்கை விமானப்படையின் 2020ம் ஆண்டுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் பற்றிய ஊடகவிலாளர் கருத்தரங்கு.

இலங்கை விமானப்படையின் 69 வது  ஆண்டு நிறைவையொட்டியும்  21 வது விமானப்படை  சைக்கிள் ஓட்டப்போட்டி பற்றியும்  ஊடகவியலாளர்  கருத்தரங்கு ஓன்று கடந்த 2020 பெப்ரவரி 26 ம் திகதி  விமானப்படை  கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படை அதன் 69 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.இந்த நிகழ்வு விமானப்படை  வரலாற்றில்  முக்கியான ஒரு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான  வேலைகள்  மார்ச் 01ம் திகதி  முதல் ஆரம்பிக்கப்பட்டது  என்பது விசேட அம்சமாகும்.

இதன் முதலாவது  நிகழ்வாக  மல்லிகை மலர் பூஜை நிகழ்வு  களனி ரஜமஹா  விகாரையில் மார்ச் 01 ம்  திகதி     விமானப்படை தளபதி மற்றும்  அதிகாரிகள்  படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் பங்கேற்பில் இடம்பெற்றது.

மார்ச் 02  ம் திகதி அன்று  விமானப்படையின்  69 வது வருட பூர்த்தி  தினத்தில் விமானப்படை  தலைமை காரியாலயத்தில்  விமானப்படை  தளபதி அவர்களினால்  உரை நிகழ்த்தப்பட்டு அனைத்து விமானப்படை நிலையங்களுக்கும்  நேரடியாக  ஒளிபரப்பு செயப்படடும் .

விமானப்படையின் 69வது  வருடன நினைவை முன்னிட்டு  மேலும் 21 வது  விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டியும்    இடம்பெற  உள்ளது இந்த  நிகழ்வில்  100 ஆண்களும் 30 பெண் போட்டியாளர்களும்   பங்குபெறவுள்ளனர்.

இலங்கை விமானப்படை  மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சங்கம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றது  இது   சைக்கிள் போட்டிகளின் விதிமுறைப்படி இந்த போட்டிகள் இடம்பெறும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.