விமானப்படையின் சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் 02 ம் கட்ட போட்டிளில் சூப்பர் வீலர்ஸ் சைக்கிள் ஓட்டுநர், தர்ஷன பிரசாத் முதலாம் இடத்தை பெற்றார்.

இலங்கை    விமானப்படையின்  69 வது   வருடத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட 21 வது  விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளின்  02 ம் கட்ட தொடர் கடந்த 2020 மார்ச் 06 ம் திகதி  திருகோணமலையில்  நிறைவுக்கு வந்தது இதன்  தூரம் 215 கிலோ மீட்டர் ஆகும் . 

இதன்போது சூப்பர் வீலர்ஸ் சைக்கிள் ஓட்டுநர், தர்ஷன பிரசாத் முதலாம் இடத்தை பெற்றார்.  மேலும்  சூப்பர் வீலர்ஸ் சைக்கிள் ஓட்டுநர்   சாமிக சந்துன்  மற்றும் இராணுவ   வீரர்   அவிஷ்க மெடான்சா  ஆகியோர் முறையே 02 ம் 03 ம் இடத்தை பெற்றுக்கொன்றனர் .

இந்த போட்டித்தொடரின் இறுதி சுற்று 2020 மார்ச் 07  காலை 08.30  மணிக்கு திருகோணமலையில் இருந்து அனுராதாபுரம் வரை இடம்பெறும்  சுமார் 156கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும் .

மேலும் பெண்களுக்கான தொடர் 2020 மார்ச் 07 ம் திகதி  புத்தளம் நகரத்தில் இருந்து  அனுராதபுரத்தில் நிறைவுக்கு  வரவுள்ளது   இதன்  தூரம் 110 கிலோ மீட்டர் ஆகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.