வருடாந்த முகாம் பரிசோதனை மீரிகம - 2011

இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் மீரிகம விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை கடந்த 16.09.2011ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து மீரிகம விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" ரொகன ஜயசுந்தர அவர்கள் அவரை வரவேற்ற அதேநேரம் "பிலைட் லெப்டினன்" சன்ன நந்தசேன அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் வரவேற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு விமானப்படைத்தளபதியினால் விஷேட சன்மானங்களும் வழங்கி வைக்கப்பட்ட அதேநேரம் மா மரக்கன்றுகளும் நடப்பட்டன .

இறுதியாக விமானப்படைத்தளபதி முகாமின் அதிகாரிகள் உட்பட அனைத்து படை உறுப்பினர்களுடனும் பகல் மதிய போஷனம் உட்கொண்டதன் பின்னர் அவர்  அங்கு உரையாற்றுகையில் நாட்டின் அபிவிருத்திக்கு சகலரும் ஒத்துழைக்க முன்வரவேண்டும் என வேண்டிக்கொண்டார்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.