விமானப்படை மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரர் மதுர பீரிஸ் அவாக்ள் தேசிய நிலையான / மாற்றியமைக்கப்பட்ட 125 சீ சீ மோட்டார் போட்டிகளுக்கான விருதை வென்றார்.

தேசிய மோட்டார் பந்தய சம்மேளனத்தினால்  நடாத்தப்பட்ட  தேசிய மோட்டார் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபவம்  கடந்த 2020 மார்ச் 14 ம் திகதி  கட்டுநாயக்க ஈகிள்  லகூன் வீவ் அரங்கில்  இடம்பெற்றது .

இந்த நிகழ்வில்  விமானப்படையை  சேர்ந்த  சிரேஷ்ட படைவீரர் மதுர பீரிஸ் அவர்களுக்கு  2019 ம் ஆண்டுக்கான நிலையான / மாற்றியமைக்கப்பட்ட  125 சீ சீ  மோட்டார்  போட்டிகளுக்கான விருது வழங்கப்பட்டது  மேலும்  அதே பிரிவில்சார்ஜன்ட்  சுசந்த திசாநாயக்க அவரக்ளுக்கு சிறந்த ட்யூனர் / தொழில்நுட்ப வல்லுநராக விருதும்  அளிக்கப்பட்டது .

2012 ம் ஆண்டு மதுர  பீரிஸ்   அவர்கள்  விமானப்படை அணியில் அறிமுகமானார்  மேலும் அவர்  விமானப்படைக்காக பல விருதுகளையும்  பெற்றுள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.