பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை தனிமை படுத்தும் வேலைத்திட்டத்தில் விமானப்படை வேதியியல் உயிரியல் கதிர்வீச்சு அணு மற்றும் வெடிபொருள் பிரிவு அணியினர்.

பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்திற்கு வரும்  பயணிகளை தனிமை படுத்தும் வேலைத்திட்டத்தில் விமானப்படை வேதியியல் உயிரியல் கதிர்வீச்சு அணு மற்றும் வெடிபொருள் பிரிவு அணியினர்  தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

வெவ்வேறு நாட்டில் பணிபுரிந்து கட்டுநாயக்க விமான  நிலையத்திற்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்க்காக   இராணுவப்படையின் பஸ் வாகனம் மூலம் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு  அழைத்து செல்லப்படுகின்றனர்.

 விமானப்படை   தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இது தொடர்பாக  கடந்த 2020மார்ச் 15ம் திகதி கட்டுநாயக்க விமான  நிலையத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார் இதன்போது பண்டாரநாயக்க விமான நிலைய விமானப்படை தள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமரசிங்க இலங்கை விமானப்படையின் வேதியியல் உயிரியல் கதிர்வீச்சு அணு மற்றும் வெடிபொருள் பிரிவு, கட்டளை அதிகாரி விங் கொமடோர் நிலேந்திர பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.